×

நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் உதவி பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.2.42 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவு அளித்துள்ளார். வழக்கில் இருந்து பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை விடுவித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக 2018-ம் ஆண்டு நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்

The post நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nirmaladevi ,Srivilliputur Women's Rapid Court ,Virudhunagar ,Assistant Professor ,Nirmala Devi ,Dinakaran ,
× RELATED குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்...